தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் 14 பேர் இடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து டிஜிபி திரிபாதி நேற்று வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்காப்பக டி.எஸ்.பி டி.பார்த்திபன், கோவை நகர மத்திய குற்றபிரிவு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் எஸ்.சவுந்தரராஜன், ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பியாகவும், இந்தப் பதவியில் இருந்த டி.எஸ்.பி ஆர்.சவுந்தரராஜன் பென்னாகரம் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டனர்.  தர்மபுரி பென்னாகரம் டி.எஸ்.பி ஆர்.மேகலா தமிழ்நாடு போலீஸ் அகாடமி(சென்னை) டி.எஸ்.பியாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமி டி.எஸ்.பி எஸ்.ஜான் விக்டர் சென்னை துரைப்பாக்கம் உதவி ஆணையராகவும், இந்தப் பதவியில் இருந்த டி.லோகநாதன் திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பியாகவும், இந்தப் பதவியில் இருந்த டி.எஸ்.பி அசோகன் சென்னை எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையர் பி.சம்பத், பரங்கிமலை உதவி ஆணையராகவும், பரங்கிமலை உதவி ஆணையர் எம்.ஜீவானந்தம், சென்னை மாநகர போலீஸ் பயிற்சி பள்ளி உதவி ஆணையராகவும், சென்னை துறைமுகம் உதவி ஆணையர் ராஜகோபால் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஹனுமனந்தன், வண்டலூர் டி.எஸ்.பியாகவும், வண்டலூர் டி.எஸ்.பி ரவிச்சந்திரன், திருத்தனி டி.எஸ்.பியாகவும், திருத்தனி டி.எஸ்.பி குணசேகரன், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியாகவும், திருவள்ளூர் வணிக குற்ற விசாரணை பிரிவு டி.எஸ்.பி ஜாகிர் உசேன், தூத்துக்குடி போதைப்பொருள் உளவுத்துறை பிரிவு டி.எஸ்.பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>