பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த இளையராஜாவின் பொருட்கள் ஒப்படைப்பு

சென்னை: சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவை  விட்டு இசை அமைப்பாளர் இளையராஜா வெளியேற வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம்  அறிவித்தது. இதை தொடர்ந்து இடத்தை காலி செய்வது தொடர்பாக இருதரப்புக்கும்  இடையே வழக்கு நடந்தது. ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க  வேண்டும் என்றும், தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்றும் இளையராஜா  வழக்கு தொடர்ந்தார். இதற்கு கோர்ட் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜாவின் அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கிருந்த அவரது பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. இதை அறிந்து இளையராஜா வேதனை அடைந்தார். அவர் ஸ்டுடியோவுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இளையராஜாவின் வக்கீல்கள், நீதிமன்றம் நியமித்த ஆணையர்களிடம், இளையராஜா ஸ்டுடியோவில் வைத்திருந்த பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டியல் சரிபார்க்கப்பட்டு,  பொருட்கள் எடுக்கப்பட்டது. 7 பீரோக்களில் 160 பொருட்களை இளையராஜா தரப்பினரிடம் ஸ்டுடியோ நிர்வாகம் ஒப்படைத்துள்ளது என கூறப்படுகிறது.

Related Stories:

>