×

அளவுக்கு அதிகமாக ரஜினிக்கு அழுத்தம் கொடுத்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் கற்ற ஒரு பாடம் என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த்தை போன்று மனநிலையில் உள்ளவர்கள் ஒரு போதும் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டார்கள். 1996ல் ரஜினிகாந்த்துக்கு இதை போன்று கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அவர் அதை மறுத்தார். ரஜினிகாந்துக்கு இப்போது இருப்பதை விட அப்போது உடல் நலம் நன்றாகவே இருந்தது. செல்வாக்கும் இருந்தது.

ஒருவேளை அவர் அப்போது கட்சி ஆரம்பித்திருந்தால் வெற்றி வாய்ப்புகள் கூட கிடைத்திருக்கும். ஆனால் அவர் என்ன நினைத்தார் என்றால், கலைஞரும், மூப்பனாரும் இணைந்து ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தார். ஆனால் இப்போது பாஜகவினர் அவருக்கு அளவுக்கு அதிகமான அழுத்தத்தை தந்து விட்டனர். அவர்கள் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது. இந்தமுறை தோற்கடித்துவிட்டால் அதிமுகவை கையில் வைத்துக் கொண்டு பாஜவின் நேரடி ஆட்சியை தமிழகத்தில் நடத்த முடியும் என நம்பினர்.  

எனவே ராஜதந்திரிகள் அந்த ஆலோசனையை தான் பாஜவுக்கு வழங்கினர். அதன்படி தான் ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் நேற்று கூட சொன்னேன். அவர் வந்திருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது.


Tags : Rajini , Excessive pressure on Rajini: KS Alagiri Review
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...