×

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இல்லை : கோவில் நிர்வாகம் தகவல்!!

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கின்ற அற்புத திருத்தலம் இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் குடைவரைக் கோவிலில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இல்லை என்று கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது .  அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அரசின் கொரோனா பரவல் தடை நெறிமுறைகள் கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மேலும் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சில முக்கிய வழிமுறைகள்!!

*கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டாயமாக உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படும்

*முகக்கவசங்களுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அணுமதி அளிக்கப்படும்

*10 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

*புத்தாண்டு அன்று அர்ச்சனை கிடையாது

*அதிகாலை நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்

*மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் காட்சியளிப்பார், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் அருள்பாலிப்பார்.

*மதியம் நடை சாத்தப்படமால் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

Tags : Pillaiyarpatti Ganesha ,eve ,administration ,Temple , Pillaiyar patti
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...