×

சிறுமியை கடத்திச்சென்ற டிரைவர் போக்சோவில் கைது

பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் புளியந்தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில், கடந்த ஒரு வருடமாக டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது, இளைய மகள் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 3 மாதங்களாக தந்தையுடன் உள்ளார். கடந்த 16ம் தேதி காலை 6 மணிக்கு டீ கடைக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் தனது மகள் காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான, போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஐயப்பன் (23), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் சென்று, சிறுமியை மீட்டு, டிரைவர் ஐயப்பனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post சிறுமியை கடத்திச்சென்ற டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Perampur ,Viluppuram district ,Pleyanthopu ,Boxo ,
× RELATED போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு