அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி

டெல்லி: அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை டிசம்பர் 28, 29 அன்று அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி ஒத்திகை  நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் திட்டமிடப்படும் என கூறியுள்ளது.

இந்த இரண்டு நாள் செயல்பாடு 2020 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நடவடிக்கை என்பது கொரோனா தடுப்பூசி போட்டத்தும் ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதை மையமாக கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Related Stories:

>