தென்னாப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை

கேப் டவுன்: புதியவகை கொரோனா அச்சத்தால் தென்னாப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசின் புதிய வகை தொற்றால், அனைத்து நாடுகளும் விழிப்புணர்வுடன் உள்ளன. அதன் தொடர்ச்சியாக பல நாடுகள் இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் இருந்து தென்னாப்பிரிக்கா வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மதுபானங்கள் விற்பனைக்கு அந்நாடு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>