காங். தலைவர் அழகிரி மீது வழக்கு

வேலூர்: வேலூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரிய ஏர்க்கலப்பை சங்கமம் மாநாடு நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லிபிரசாத், தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், எம்பி விஷ்ணுபிரசாத், வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு விஏஓ ரஞ்சித் அளித்த புகாரின்பேரில் அனுமதி பெறாமல், சமூக இடைவெளி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவர்கள் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>