×

‘உலகின் தலைசிறந்த சொல் செயல்’ செயல்படுத்தி காட்டிய ரஹானே

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரஹானே. அடிலெய்டில் தோல்வி, கேப்டன் கோலி இல்லை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லை என்பது மாதிரியான நெருக்கடியான நிலையில், “இந்தியா இந்தத் தொடரில் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சொல்லி வந்தபோதும் அசராமல் அணியை திறம்பட வழிநடத்தியதோடு, தனிப்பட்ட முறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் ரஹானே.

தனக்கு இருக்கிற வாய்ப்புகளை வைத்து கிடைக்கிற கேப்பிலெல்லாம் சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருந்தார். ஓவர்களில் மாற்றம் செய்த நிலையில் அஸ்வினும் ஆஸ்திரேலியாவின் முதுகெலும்பான ஸ்மித்தை டக் விக்கெட்டை எடுத்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு ரஹானே கொடுத்த பெரிய அடி. ஒரு கேப்டனாக தன்னை முதல் நாளிலேயே நிரூபித்த ரஹானே, இரண்டாவது நாளில் பேட்ஸ்மேனாகவும் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொண்டார். ஹனுமா விஹாரி, பண்ட், ஜடேஜா ஆகியோருடன் நின்று இவர் போட்ட பார்ட்னர்ஷிப்கள்தான் இந்திய அணியை லீட் எடுக்க வைத்தது. ரஹானேவின் அந்த சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு காரணமாக அமைந்தது.

மதுமட்டுமின்றி சக வீரர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியதோடு தனது ஆளுமையையும் வெளிப்படுத்தினார். ரஹானே ஃபீல்ட் செட்டப்பிலும், பௌலிங் சேஞ்சிலும் காட்டிய அக்ரஷனை ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் காட்டவில்லை என்பது ஆஸ்திரேலியா தோல்வியுற மிக முக்கிய காரணமாக அமைந்தது. தலைக்கு மேல் கத்தியாக ரஹானேவுக்கு மோசமான ஃபார்மால் அவரது கெரியரே கேள்விக்குள்ளாகியிருந்த அனைத்தையும் முறியடித்து ரஹானே வென்றார். ‘உலகின் தலைசிறந்த சொல் செயல்’ என ஒரு திரைப்பட வசனம் உண்டு. அது ரஹானேவுக்கு 100% பொருந்தும்.

அமைதியாக இருந்து கொண்டு, செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, மோசமான தோல்வியின் சுவடே தெரியாமல் மீட்டு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார் ரஹானே.


Tags : Rahane ,World's Greatest Word Action , Rahane, who executed ‘The World’s Greatest Word Action’
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!