அசாமில் காங்கிரஸ் கட்சி நீக்கிய 2 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்.!!!

குவஹாத்தி: அசாமில் காங்கிரஸ் கட்சி நீக்கிய 2 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். அசாம் மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோலகாட் தொகுதி எம்எல்ஏவுமான அஜந்தா நியோக், பாஜகவை சேர்ந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவாலை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவர் வகித்து வந்த கோலாகட் மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியது.

காங்கிரஸ் சார்பில் நான்கு முறை அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜந்தா நியோக் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு முன் அசாம் சென்றிருந்த போது, திடீர் திருப்பமாக அஜந்தா நியோக் நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பாஜகவில் சேரப்போகிறேன்’ என்றார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள் அஜந்தா நியோக் மற்றும் ராஜ்தீப் கோவாலா மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து, அஜந்தா நியோக் கூறுகையில், இங்கே காங்கிரசில் எந்த ஒழுக்கமும் இல்லை, கட்சி திசையற்றது. அடிமட்ட தொழிலாளர்கள் நினைப்பதைப் பற்றி அவர்களின் தேசிய தலைமை கவலைப்படவில்லை என்றார். காங்கிரஸ் ஒரு பார்வை இல்லாத கட்சி என்று ராஜ்தீப் கோவாலா தெரிவித்தார். அசாமில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>