அணைக்கு வரத்து குறைவால் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது

கரூர்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், திருமுக்கூடலூர், மாயனூர், குளித்தலை வழியாக திருச்சி நோக்கி காவிரி ஆறு செல்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றது. தற்போதைய நிலையில், மேட்டுர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக பெய்வதாலும், அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதாலும் தற்போது கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் மிகக் குறைந்த அளவிலே தண்ணீர் செல்கிறது.காவிரியில் ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரின் அளவு குறைந்து தற்போது குறைந்த அளவே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>