×

வேளாங்கண்ணிக்கு நிறுத்தப்பட்ட ரயில்சேவையை துவங்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு நுகர்வோர் பாதுகாப்புகுழு கோரிக்கை

நாகை: கொரோனா ஊரடங்கால் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு நிறுத்தப்பட்ட பல்வேறு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் அரவிந்த் குமார் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் மீண்டும் ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள வேளாங்கண்ணிக்கு மட்டும் இன்னும் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே இயங்கி வந்த காரைக்கால் வேளாங்கண்ணி பயணிகள் ரயில் சேவை, நாகை வேளாங்கண்ணி பயணிகள் ரயில் சேவை, சென்னை வேளாங்கண்ணி 5 பெட்டிகள் கொண்ட இனைப்பு ரயில், வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில், வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய சேவைகளை தொடங்க வேண்டும்.

மேலும் வேளாங்கண்ணி தஞ்சை இடையே பயணிகள் ரயில் அல்லது விரைவு ரயில் சேவையை தொடங்க வேண்டும். வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர ரயில்களை தினசரி விரைவு ரயில்களாக இயக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த நாகை, திருக்குவளை, திருத்துறைப்பூண்டி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் இதுவரை ஆரம்ப கட்டப்பணிகள் மட்டுமே நடத்துள்ளது. எனவே இந்த பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Velankanni ,Union Minister ,Consumer Protection Committee , Velankanni
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...