ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இல்லை... ஐசிசி அறிவித்துள்ளது உலக அணியா, ஐபிஎல் அணியா? சோயிப் அக்தர் பாய்ச்சல்

லாகூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த 10 ஆண்டுகளுக்கான சர்வதேச டெஸ்ட், ஒன்டே மற்றும் டி.20 போட்டிகளுக்கான கனவு அணிகளை அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான கனவு அணியின் கேப்டனாக மகேந்திரசிங் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக தேர்வாகி உள்ளார். மேலும் 3 அணிகளிலும் இடம்பிடித்துள்ள ஒரே வீரர் கோஹ்லி தான். இவர்களை தவிர ரோகித்சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகிய இந்தியர்கள் அணியில் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களில் ஒருவர் கூட, 3 அணிகளிலும் இடம்பெறவில்லை. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ஐ.சி.சி. மீது கடுமையாக சாடி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``ஐ.சி.சி.க்கு  பாகிஸ்தானும் ஓர் உறுப்பினர் என்பது மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். டி.20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ஏன் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் அணியில் ஒருவரை கூட அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. இது உலக கிரிக்கெட் அணியாக அல்ல, ஐபிஎல் அணியை நீங்கள் அறிவித்ததால், உங்கள் (ஐசிசி) டி 20 ஐ அணி எங்களுக்கு தேவையில்லை. ஐ.சி.சி பணம், ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிவி உரிமைகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது. ஐ.சி.சி., பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை அழித்து வருகிறது.

ஒரு நாள் போட்டியில், 2 புதிய பந்துகளையும் மற்றும் 3 பவர் பிளேக்களையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 5 திறமையான வீரர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனிஸ் எல்லாம் என்ன ஆனார்கள்.உலகின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் எங்கே இருக்கின்றனர்? அவர்கள் எல்லாம் அணியில் இல்லை. பாபர் அசாம் நாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அவரது சராசரி காட்டுகிறது. இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இந்த வீடியோவுக்குப் பிறகு அவர்கள் நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஐபிஎல் அணி அல்ல, தசாப்தத்தின் உலக அணியை அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>