×

தமிழக தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோவில்பட்டி: தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இம்முறையும் புதிய வகை கொரோனா பரவல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? என்கிற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான பதிலைநேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் பூஜ்யம் கல்வியாண்டாக நடப்பு கல்வியாண்டை அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும். அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 78% ஆக உயர்ந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 52 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : election ,Senkottayan ,Tamil Nadu , The date of the general election will be decided according to the Tamil Nadu election dates: Interview with Minister Senkottayan
× RELATED தேர்தல் விதிமுறை அமல் குறைதீர் மனுக்களை பெட்டியில் போடலாம்