×

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு கொரோனா: தயாராக இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

* பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா
* 6 இடங்களில் பரிசோதனை ஆய்வகம் அமைப்பு
* மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மாதிரி புனே மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. புனே மையத்திற்கு அனுப்பட்ட மாதிரிகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.  பெங்களூரு மையத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஐதராபாத் மையத்தில் சோதனை மாதிரிகளில் 2 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

6 இடங்களில் ஆய்வகம் அமைப்பு:

கொல்கத்தா, புனே, புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு, டெல்லி ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதனை நடைபெறுகிறது. பெங்களூரு ஆய்வகத்தில் 3 பேருக்கும், புனே ஆய்வகத்தில் ஒருவருக்கும், ஐதராபாத் ஆய்வகத்தில் 2 பேருக்கும் மாற்றம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா டென்மார்க், ஸ்வீடன் நாடுகளுக்கு பரவியுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்:

நவ.25 முதல் டிச.23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 33,000 பேரில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா உறுதியான 6 பேர், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



Tags : Corona ,returnees ,State Governments ,UK ,India , In the UK, India, Corona for 6 people
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...