ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ‛டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

Related Stories:

>