×

கான்பூரில் இருந்து டெல்லி பூங்காவிற்கு வந்தது வங்க புலி

புதுடெல்லி: டெல்லி விலங்கியல் பூங்காவிற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட வங்காள புலியை மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பூங்காவிற்குள் திறந்துவிட்டார். டெல்லி விலங்கியல் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே இதுபற்றி தெரிவித்ததாவது:  டெல்லி விலங்கியல் பூங்காவிற்கு கடந்த மாதம் கான்பூர் மிருகக்காட்சிசாலையில் இருந்து பர்கா என்கிற ஒரு புலி கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் பூங்காவிற்குள் அந்த வங்க புலியை மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திறந்துவிட்டார். மேலும், தற்போது, பூங்காவில் ஒரு ஜோடி சாதாரண வங்காள புலிகள் மற்றும் ஐந்து வெள்ளை புலிகள் உள்ளன.  டெல்லி மிருகக்காட்சி சாலையின் புதிதாக உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சுப்ரியோ தொடங்கி வைத்தார். இதன்மூலம் விலங்கியல் பூங்காவிற்குள் வரவதற்கான அனுமதி டிக்கெட்டுக்களை இந்த ஆன்லைன் போர்டல் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு பாண்டே கூறினார்.



Tags : Delhi Park ,Kanpur , The Bengal tiger came to Delhi Park from Kanpur
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை