×

ஏபிஎம்சி சட்டத்திருத்த குழப்பத்திற்கு அமைச்சரவையில் விவாதித்து உரிய முடிவு: அமைச்சர் எஸ்டி சோமசேகர் தகவல்

பெங்களூரு: ஏபிஎம்சி சட்ட திருத்தம் காரணமாக உருவாகியுள்ள குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சரவையில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்டி சோமசேகர் கூறினார்.
 பெங்களூரு கேஜி  ரோடு எப்கேசிசிஐ வளாகத்தில்  ஏபிஎம்சி  சட்டத் திருத்தம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்டி சோமசேகர் இதில் பங்கேற்று பேசுகையில், ``கூட்டுறவு துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று விவசாயிகள், வியாபாரிகள் பிரச்னையை அறிந்துள்ளேன்.  ஏபிஎம்சி மார்க்கெட்டில் இதற்கு முன்பு செஸ் வரி 1.30 என்று இருந்தது. அது இப்போது ₹1 ஆக குறைக்கப்பட்டது. இதை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் முதல்வர் எடியூரப்பா 35 பைசாவுக்கு குறைக்க முடிவு செய்தார். அதே நேரம் ₹500 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் செஸ் மறுபடியும் ₹1 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம் ஏபிஎம்சி  மார்க்கெட்டை மூடுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. ஏபிஎம்சி  சட்டத் திருத்தம் காரணமாக உருவாகியுள்ள குழப்பத்திற்கு தீர்வு  காணும் வகையில் முதல்வர் எடியூரப்பாவிடம் ஆலோசனை  நடத்தப்படும். அத்துடன் அமைச்சரவையில் விவாதிப்பேன்’’ என்றார். ஏபிஎம்சி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எப்கேசிசிஐ தலைவர் பெரிகல் சுந்தர், ஏபிஎம்சி  இயக்குநர் கரிகவுடா உள்ளிட்டோர் அமைச்சர் எஸ்டி சோமசேகருக்கு நினைவு பரிசு வழங்கினர்.


Tags : ABMC ,Minister ,Cabinet ,SD Somasekar , Cabinet decision to discuss ABMC legal confusion: Minister SD Somasekar
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...