×

அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி திறப்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: மாநிலத்தின் அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி திறக்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும் என அமைச்சர் சுதாகர் கூறினார். பெங்களூரு மாகடி ரோட்டில் \”ஆரோக்ய சவுதா\” கட்டிடத்தை  முதல்வர் எடியூரப்பா திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனா பாதிப்பின் காரணமாக வளர்ச்சி பணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அது போன்ற சூழ்நிலையில் முதல்வர் எடியூரப்பா சுகாதார துறைக்கு அதிக நிதி அளித்துள்ளார். அதன் காரணமாக சுகாதார துறையின் சார்பில் கொரோனா வைரஸ்  பரிசோதனை, மருத்துவ கருவிகள் கொள்முதல் பணிகள் நடந்துள்ளன. அத்துடன் சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் புதிதாக நான்கு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளன. இதில் மூன்று மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் தற்போது 18 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதே நேரம் 9 மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லை.

இதை கருத்தில் கொண்ட அரசு அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி தொடங்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளது .எந்தெந்த மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லை என்பதை அறிந்து அந்தந்த மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். மருத்துவ கல்லூரி‘ அமைப்பதுடன் சிறப்பு மருத்துவமனைகளும் மாவட்டந்தோறும் அமைக்கவும்  முடிவு செய்துள்ளோம். அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசின் காரணமாக சில மாதங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தியுள்ளோம். புதிய கொரோனா வைரசின் பரவல் மற்றும் அதை தடுக்கும் வகையில் புதிய வழிக்காட்டு முறைகள் வெளியிடுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை  நடத்தி வருகிறோம். விரைவில் புதிய வழிக்காட்டு முறைகள் வெளியிடப்படும், என்றார். சுகாதார துறையின் அனைத்து அலுவலகங்களும் மாகடி ரோட்டிலுள்ள  ஆரோக்ய சவுதா கட்டிடத்தில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  



Tags : Government ,colleges ,Minister Sudhakar ,districts , Government aims to open medical colleges in all districts: Minister Sudhakar
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...