×

பத்திரிகையாளர் தற்கொலை முயற்சி அமைச்சர் பதவியை சுதாகர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

மைசூரு: சிக்கபள்ளாபுரா பத்திரிகையாளர் தற்கொலை முயற்சிக்கு காரணமான அமைச்சர் சுதாகர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம். லட்சுமண் வலியுறுத்தினார்.
மைசூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிக்கபள்ளாபுரா மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டெத்நோட் எழுதி வைத்துள்ளார். அதில் அமைச்சர் சுதாகர் குறித்து செய்திகள் வெளியிட்ட காரணத்தால் போலீசார் மூலம் எனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்றும் இதற்கு மாவட்ட எஸ்.பி.மிதுன், சப்-இன்ஸ்பெக்டர் பாபண்ணா ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் சுதாகர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கர்நாடக மாநிலம் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தை போல் ஆகியுள்ளது. மாநில அமைச்சர்களுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் அவர்கள் மீது ஐ.டி. இ.டி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பத்திரிகையாளருக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். விசாரணை முடிந்த பின் அவருக்கு முதல்வர் பதவி வழங்கினாலும் பரவாயில்லை. இது தொடர்பாக டி.ஜி.பி., ஐ.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அளித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் என்றார்.


Tags : Sudhakar ,Congress , Journalist Suicide Attempt Minister Sudhakar should resign: Congress spokesman insists
× RELATED மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி