×

ஐ.ஜி.டி.டி.டபிள்யூ கல்லூரி பட்டமளிப்பு விழா தொழில்முனைவோர் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்: துணை முதல்வர் சிசோடியா பேச்சு

புது டெல்லி: இந்திரா காந்தி டெல்லி மகளிர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (ஐ.ஜி.டி.டி.டபிள்யூ) பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிசோடியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் மொத்தம் 487 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் வேந்தர் விருதையும் 11 மாணவர்கள் துணைவேந்தர் விருதையும் பெற்றனர். ஒரு மாணவர் முன்மாதிரியான செயல்திறன் விருதையும் பெற்றார். பின்னர் நிகழ்ச்சியில் சிசோடியா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது பல்கலை கழகங்களில் பயிற்றுவிக்கப்பட்ட திறமைகளோடு உள்ள மாணவர்களை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், அதுபோன்ற நிறுவனங்களை மாணவர்கள் துவங்கி மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடத்தை நோக்கி செல்வதற்கான நேரம் இது.  

நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு நமது திறமையைப் பயன்படுத்த, நமது மாணவர்கள் உருவாக வேண்டியது அவசியம். எனவே,அவர்களுக்கு தொழில் முனைவோர் மனநிலையை வளர்க்க வேண்டும். நாம் அதிக சம்பளம் பெறுவதை கொண்டாட வேண்டும். அதேசமயத்தில் நமது மாணவர்கள் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கு வேலை வழங்குவதையும் நாம் கொண்டாட வேண்டும். கல்வியின் நோக்கம் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறுவதல்ல. மாறாக, பல பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கும் வகையில் நம் குழந்தைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் மாணவர்கள் பண ரீதியாக மட்டுமே பங்களிக்க முடியும். அதே நேரத்தில் புதிய நிறுவனங்களை நிறுவுபவர்கள் நமது நாட்டு பொருளாதார முன்னேற்றத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவார்கள்.இவ்வாறு கூறினார்.

Tags : IGDTW College Graduation Ceremony to Develop Entrepreneurial Mood ,Deputy Principal , IGDTW College Graduation Ceremony to Develop Entrepreneurial Mood in Students: Deputy Chief Minister Sisodia Speech
× RELATED ‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.....