×

மூட்டை, மூட்டையாக காயலான் கடைக்கு வந்த இலவச பாடப்புத்தகங்கள்: அதிகாரிகள் விசாரணை

மயிலாடுதுறை: நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் காயலான் கடையில் மூட்டை, மூட்டையாக இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் வாடகை கட்டிடத்தில் காயலான் கடை நடத்தி வருபவர் பெருமாள்சாமி (55). இவரை காலி செய்வதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (29ம் தேதியுடன்) கால அவகாசம் முடிகிறது. இது குறித்து மயிலாடுதுறை ஆர்டிஓ மற்றும் அதிகாரிகள் அந்த காயலான் கடைக்கு சென்று கடையை காலி செய்யும் உத்தரவை வாசலில் நேற்று ஒட்டினர்.

அப்போது இந்த கடையை ஆர்டிஓ மகாராணி பார்வையிட்ட போது, கிடங்கின் ஒரு பகுதியில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் பண்டல், பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வந்து கடை உரிமையாளர் பெருமாள்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : store ,Kayalan , Free textbooks, officers, inquiry
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!