மைசூரு-ஐதராபாத் இடையே மேலும் ஒரு விமான சேவை

மைசூரு: மைசூரு-ஐதராபாத் இடையிலான மேலும் ஒரு விமானம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மைசூரு-ஐதராபாத் இடையில் தினமும் ஒரு ஏர்இந்தியா விமான சேவை இயங்கி வருகிறது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், கூடுதல் விமானம் சேவை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இத்துடன் மைசூருவில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதே போல் ஐ.டி. கம்பெனிகள் உட்பட பல்வேறு தொடர்புகள் ஐதராபாத் இடையே இருப்பதால் இன்டிகோ விமானம் மேலும் ஒரு விமான சேவையை கூடுதலாக ஆரம்பித்துள்ளது. காலை 10.50 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் விமானம் மதியம் 12.50 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அதே போல் ஐதராபாத்திலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.25 மணிக்கு மைசூருவிற்கு வந்து சேரும்.  இத்துடன் இரவு 8 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் விமானம் இரவு 10 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>