×

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய புகார் அனந்த்குமார் ஹெக்டே மீதான வழக்கு தள்ளுபடி

பெங்களூரு: இஸ்லாமியர்கள் குறித்து தவறான விமர்சனம் செய்ததாக அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  முன்னாள் மத்திய அமைச்சரும், வடகனரா தொகுதி பாஜ எம்பியுமான அனந்தகுமாார் ஹெக்டே, கடந்த 2016ம் ஆண்டு வடகனரா மாவட்டம், சிர்சியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர்கள் உலகத்தின் வெடிகுண்டு போன்ற அபாயமானவர்கள் என்று பேசியதாகவும், அவரின் பேச்சு சிறுபான்ைம வகுப்பினரை காயப்படுத்தியுள்ளதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று முராஹி உசேன் என்பவர் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு நீதிபதி தியாகராஜ் என்.இனவளி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தபோது, மத்திய அரசில் பொறுப்புள்ள அமைச்சராக இருந்தவர், குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை கீழ்தரமாக விமர்சனம் செய்துள்ளது, கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக’’ தெரிவித்தார்.  அதற்கு மறுப்பு தெரிவித்து அனந்தகுமார் ஹெக்டே சார்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ் நாகராளே வாதிடும்போது, தனது கட்சிக்காரர் உள்நோக்கத்துடன் அதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை’’ என்றார்.
இரு தரப்பு வாதம் கேட்டபின், ஹெக்டேவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Ananth Kumar Hegde ,Islamists , Dismissal of case against Ananth Kumar Hegde for speaking out against Islamists
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை