×

அதிமுக ஆட்சி லஞ்ச பட்டியலை வெளியிட்டார்: தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல்: திருச்சியில் கமல் குற்றச்சாட்டு

திருச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3ம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக நேற்றுமுன்தினம் திருச்சி வந்தார். 2ம் நாளான நேற்று நடந்த மகளிர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், பின்னர்  அளித்த பேட்டி: தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த ஊழல் இல்லாமல் இருக்க மநீம ஆட்சிக்கு வந்தால், மக்கள் விண்ணப்பிக்காமல் இவை சென்றடையும். இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள்.

பேப்பர் இல்லா மின்னணு இல்லங்கள், மின்னணு அலுவலகங்களை மக்கள் நீதிமையம் உருவாக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இன்டர்நெட் வசதியுடன் மடிக்கணினி வழங்கப்படும். இது இலவசம் கிடையாது. அது அரசுடைய முதலீடு. அதை அரசு கொடுக்கும். எல்லா நகரங்களை தலைநகரங்கள் போல் கொண்டு வருவோம். அந்தந்த தொழில் சார்ந்த, துறைசார்ந்த மாவட்டங்களை தலைநகராக்க முடியும். எம்ஜிஆரை முன்னெடுப்பது போல், தேவைப்படும் நேரத்தில் கலைஞரை நான் முன்னெடுப்பேன். சாதி ரீதியான கணக்கெடுப்பை எதிர்க்கிறோம். இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று. செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும். மக்கள் நீதி மையம் திராவிட கட்சி தான். மூன்றாவது அணி அமைந்தால் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மக்கள் நீதி மையம் தலைமையில் 3வது அணி அமையும். மதவாதம் இல்லை என்று சொல்லவே முடியாது.டார்ச் லைட் எங்களுக்கு உரியது தான்.

தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போடுவோம். 50 ஆண்டுகளாக கெட்டது தான் அதிகம் நடந்துள்ளது. நல்லது மிக குறைவுதான். ரஜினிஅவரது உடல் நிலை பொறுத்துதான் கட்சி துவக்குவார். முதலில் அவர் உடல் நிலை தான் மிக முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், எம்ஜிஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர் தான் என்னை முதலில் கையில் எடுத்து தோளில் சுமந்தார். இதை பற்றி பேசுபவர்கள் சரித்திரங்களையும், நிகழ்வுகளையும் பார்ப்பது கிடையாது என்றார்.

லஞ்சம் விவரம்
அரசுமருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 300, ஆண் குழந்தைக்கு 500, பிறப்பு சான்றிதழுக்கு (பெண் குழந்தை) 200, (ஆண் குழந்தை) 500, சாதி சான்றிதழுக்கு (பெண் குழந்தை) 500, (ஆண் குழந்தை) 3000, ஓட்டுநர் உரிமம் பெற (பெண்) 1000, (ஆண்) 5000, பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு (காவல்துறை) 500, குடும்ப அட்டைக்கு 1000, இடபத்திரப்பதிவுக்கு 10,000, பட்டா மாறுதலுக்கு 5000, குடிநீர் இணைப்புக்கு 10,000, பாதாளசாக்கடைக்கு 5000, திட்ட அனுமதிக்கு 5,000 முதல் 30,000, பரம்பரை வாரிசுக்கு 500, ஓய்வூதியம், விதவை பென்ஷனுக்கு 500, பிணவறைக்கு 500 என லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது, என்றார்.

Tags : regime ,AIADMK ,crematorium ,Trichy ,Kamal , AIADMK regime, Kamal, accused
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...