×

கொரோனாவை அம்பலமாக்கிய சீன பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஷாங்காய்: சீனாவின் 37 வயதான பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அங்கு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், சீன அரசின் மெத்தன போக்கு தொடர்பான பல உண்மை செய்திகளை வெளியிட்டார்.

மேலும், தனது செய்திகளை எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், டிவிட்டர், யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரவச் செய்தார். இதனால் கொரோனா உண்மைகளை மறைக்க தடையாக இருந்ததால் ஜாங் ஜானை சீன அரசு கைது செய்தது. சுமார் 7 மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு ஷாங்காயின் புடோங்க் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Tags : Chinese ,journalist ,prison ,Corona , Corona, Chinese journalist, jailed
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...