×

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

புதுடெல்லி: பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 30கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் 2 நாள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கியது. 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தலா 25 பேர் வீதம் 100 பேருக்கு கொரோனா மாதிரி தடுப்பூசி இன்று போடப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த சோதனையில், சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பு மருந்து எவ்வளவு நேரத்தில் மருந்து மையத்தை வந்தடைகின்றது என்பது கணக்கிடப்படும். தடுப்பூசி போட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளும் ஒத்திகை பார்க்கப்படும்.

Tags : Corona ,vaccine rehearsals ,states , Corona, vaccine
× RELATED சீரம் நிறுவனம் ரூ.502 கோடி நிதி கொரோனா...