×

பீகார் அரசியலில் பரபரப்பு: பாஜஜேடியு கூட்டணி முறிவு?: முதல்வராக இருக்க விரும்பவில்லை என நிதிஷ் பேட்டி

பாட்னா: பீகாரில் பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார், தனக்கு முதல்வராக இருக்க விருப்பமில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜ  ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி விரைவில் முறிந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு)பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணியில் இருந்து விலகிய ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியால் ஐக்கிய ஜனதா தளத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. நிதிஷ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காமல் போனது. இது பாஜவின் சூழ்ச்சியாகவும் கருதப்பட்டது. இத்தேர்தலில் பாஜ 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வென்றன. குறைவான தொகுதியில் வென்றாலும் ஜேடியு தலைவர் நிதிஷ்குமாரே மீண்டும் முதல்வர் என பாஜ அறிவித்து, அதன்படி அவர் பதவியேற்றார். ஏற்கனவே பாஜ மீது அதிருப்தியில் இருந்த நிதிஷ் குமாருக்கு, பாஜ ஆதரவில் முதல்வர் பதவியில் நீடிப்பது நெருடலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் நீண்ட கால தலைவர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் நேற்று முன்தினம் விலகினார். ஆர்பிசி சிங் புதிய தலைவராக பொறுப்பேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், ‘‘தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, நான் முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று பாஜவிடம் தெரிவித்தேன். பாஜவில் இருந்து வேண்டுமானால் முதல்வரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று பதவியேற்க மறுத்தேன். ஆனால், பாஜ தான் என்னை கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்க செய்தது. எனக்கு முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பமே இல்லை’’ என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜவுக்கு தாவினர். இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், விரைவில் பாஜஜேடியு கூட்டணி முறியும் என பீகார் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே அருணா ச்சல சம்பவத்திற்குப் பிறகு கூட்டணி குறி த்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென நிதிஷுக்கு எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தி இருந்தன. எனவே பீகார் அரசியலில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bihar ,Nitish ,alliance ,chief minister , Bihar, politics, turmoil
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!