×

மேயராக 21 வயது மாணவி பதவியேற்பு: 70 ஆண்டு சாதனையை முறியடித்தார்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா, மேயராக பதவியேற்றார். கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 45 நகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த நிலையில் கேரளாவில் 6 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் 86 நகராட்சிகளின் சேர்மன் தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 21 வயதே ஆன கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் இடது முன்னணியின் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இடது முன்னணிக்கு 52  கவுன்சிலர்கள் இருப்பதால் மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்படுவது உறுதியாக இருந்தது. ஆனால் மேயர்  பதவிக்கு பா.ஜ.,வும் காங்கிரசும் போட்டியிட தீர்மானித்தன. இதையடுத்து  நேற்று வாக்கெடுப்பு நடந்தது. பா.ஜ., சார்பில் சினி ஜோதிஷும், காங்கிரஸ் சார்பில் மேரிபுஷ்பமும் போட்டியிட்டனர். இதில் 54 வாக்குகள் பெற்று ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்றார். பா.ஜ. 35 இடங்களிலும், காங்கிரஸ்  கூட்டணிக்கு 9 வாக்குகளும் கிடைத்தது. ஒரு கவுன்சிலர் சுய தனிமையில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து ஆர்யா ராஜேந்திரன் மேயராக பொறுப்பு ஏற்றார்.

கலெக்டர் நவ்ஜோத் கோசா பதவி  பிரமாணம் செய்து வைத்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த 1950ல் தம்பானூர் வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சை கவுன்சிலர் கோவிந்தன் குட்டி மேயராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 32 ஆகும். கேரளாவில் மிகக்குறைந்த வயதில் மேயரான அவரது  சாதனையை கல்லூரி மாணவி ஆர்யா முறியடித்துள்ளார்.

Tags : student ,mayor , Mayor, Student, Inauguration
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...