ஜனவரியில் 14 நாட்கள் வங்கி விடுமுறை

புதுடெல்லி: வருகிற 2021ம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை வருகின்றது. இந்த நாட்களில் வங்கிகளில் எந்த செயல்பாடும் இருக்காது.

அதாவது 4 ஞாயிற்று கிழமை, 2 சனிக்கிழமை, 8 நாட்கள் வங்கி விடுமுறை என 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வங்கி தொடர்பான பணிகளை கவனமாக  திட்டமிட்டு முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

Related Stories:

>