×

சென்னை முழுவதும் 300 இடங்களில் வாகன சோதனை தடையை மீறி புத்தாண்டு கொண்டாடினால் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை

சென்னை: சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் கீழ் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ரூ.7 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், 8 வடிவிலான நடைபயிற்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காவலர் குடும்பத்தினர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் மல்லிகா, ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:” கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொது இடங்களிலும், மதுபான விடுதி, சொகுசு விடுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட கூடாது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடக்கூடாது. சாலைகளில் வாகனங்களை வைத்து கொண்டு சாகசம் செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இதற்காக சென்னையில் 300 இடங்களில் போலீசார் தணிக்கை செய்வார்கள். மெரினா காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என பிரதான சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். போலீசாரின் தடையை மீறி பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும், நோய் தொற்று ஏற்படும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Maheshkumar Agarwal ,places ,Chennai , Police Commissioner Maheshkumar Agarwal warns against violating vehicle ban in 300 places across Chennai
× RELATED சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய...