லண்டனில் இருந்து துபாய் வழியாக ம.பி. செல்ல வந்த பெண்ணுக்கு தனிமை: நட்சத்திர ஓட்டலில் தங்க வைப்பு

சென்னை: லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் ஒரு பெண் பயணி, லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மருத்துவ குழுவினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அவர் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த 21 வயது இளம் பெண். அவர் லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்தார். பின்பு இங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் போபால் செல்ல இருந்தது தெரியவந்தது. ஆனால் சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணின் போபால் பயணத்தை ரத்து செய்தனர். அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதணை நடத்தினர். பரிசோதனை முழு முடிவு வரும்வரை அந்த பெண்ணை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டார். இதுவரை லண்டனிலிருந்து வந்த 29 பயணிகள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>