×

கொரோனா நிவாரண நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து; பிடென் மற்றும் எம்.பி.க்களின் மிரட்டலுக்கு பணிந்தார் டிரம்ப்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் அமெரிக்க நிம்மதி

வாஷிங்டன்: அமெரிக்க மக்களுக்கு 66 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிதி வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்கு பிறகு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். தனது கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள் மற்றும் ஜனபாயக கட்சி எம்பிக்களின் அளித்ததை தொடர்ந்து மசோதாவில் நேற்று இரவு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் உலகிலேயே மிக அதிகமாக 3.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்தவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் 66 லட்சம் கோடி ரூபாய்க்கான கொரோனா நிதி மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் அதிபராக நீடிக்கும் டிரம்ப் மட்டும் கையெழுத்து போடாமல் முரண்டு பிடித்து வந்தார். இந்த மசோதா வெளிநாட்டினருக்கு பயனளிப்பது போல் வடிவம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் தற்போது கொரோனா நிவாரண நிதி மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


Tags : Trump ,Corona ,Biden ,MPs , Corona Relief Fund Trump signature on the bill;
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...