லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு புதுவகை கொரோனா?: இரண்டாவது கட்ட சோதனை முடிவு 2 நாட்களில் வெளியாகும்

சென்னை: லண்ட னில் இருந்து தமி ழ கம் வந் த வர் க ளில் 4 பேரின் கொரோனா சோதனை முடிவுகளில் ஆர் என்ஏ மாறுதல் இருப்பது கண்ட றியப்பட் டுள்ளது. இறுதி கட்ட சோதனை யின் முடிவில் இது புது வகை கொரோனா தொற்றா இல்லையா என் பது

தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் இருந்து இந் தாண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா தொற்று உல கம் முழு வதும் வேகமாக பரவியது. இத னால் பல நாடு கள் ஊர டங்கை அமல் படுத்தியது. இதைப் போன்று

இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. இந்த ஊரடங்கு தற்போது படிப்ப டி யாக தளர்த்தப்பட்டு வரு கிறது. இதற்கிடையில் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு  நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதில், சில தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடு களில் அவசர காலபயன்பாட் டிற்கு வந்துள்ளது.  

இந்தியாவில் தற்போது  கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் 2021 ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்  பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் மத் திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. தினசரி 1000 பேருக்கு மட் டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரு கி றது.   இதற்கிடை யில் மரபு மாற்றம் அடைந்த புது வகை கொரோனா வைரஸ் பிரிட் ட னில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட் டுப்படுத்த அந்த  நாட் டில் பல் வேறு நட வ டிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

இத னால் பிரிட் ட னில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகிறது. இதே போன்று, இந் தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. பிரிட் ட னில் இருந்து வரும்  அனை வருக்கும்

கட் டாயம் கொரோனா பரி சோதனை செய்ய வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதன் படி, சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பிரிட் ட னில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா  பரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று வரை லண்டனில் இருந்து வந்த 2300 பயணிகளில் 1437 பயணி களுக்கு கொரோனா சோதனை செய் யப்பட் டது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களு டன் தொடர்பில் உள்ளவர்களும் கண் காணிக்கப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட் டது. இதன்படி 93 பேருக்கு சோதனை செய் யப் பட் டது. இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப் பட் டுள் ளது. இவர் கள் அனை வ ருக் கும் தனி வார் டில் சிகிச்சை அளிக் கப் பட்டு வரு கி றது.

இந்நிலையில் லண்டனில் இருந்து வந்து கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டது. இதில் 4 பேரின் மாதிரிகளில் ஆர் என்ஏ மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :

லண்டனில் இருந்து வந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டது. இந்த சோதனை முடிவுகள் நேற்று தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேரின் மாதிரிகளில் ஆர் என்ஏ மாறுதல் இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள கொரோனா தொற்றின் ஆர் என் ஏ வுக்கும் இந்த ஆர் என் ஏ வுக்கு மாறும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்துவது கட்ட சோதனை முடிவு 2 நாட் க ளில் தெரியவரும். இதை பொறுத்து தான் இது புது வகை கொரோனா தொற்றா என்பது தெரியவரும்.  இவ் வாறு அவர் கூறி னார்.

Related Stories:

>