ஐசிசி வழங்கும் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றார் 'கிங்'கோலி...! தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது

மும்பை: கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட்போட்டி வீரருக்கான ஐசிசி விருதுக்கு ஆஸி. அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தசாப்தத்தின் சிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி வென்றார். தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை எம்.எஸ்.தோனி வென்றார். சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார் இந்திய கேப்டன் கோலி. கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட்போட்டி வீரருக்கான ஐசிசி விருதுக்கு ஆஸி. அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தசாப்தத்தின் சிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி வென்றார். தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை எம்.எஸ்.தோனி வென்றார்.

மேலும் தசாப்தத்தின் டி20 மகளிர் கிரிக்கெட் வீரர் என்ற விருதை ஆஸி. விரர் எலிஸ் பெர்ரி வென்றார். மேலும் தசாப்தத்தின் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் விருது மற்றும் தசாப்தத்தின் ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தையும் ஆஸி. விரர் எலிஸ் பெர்ரி  வென்றார். வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை கொடுத்துள்ளது ஐசிசி. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது.

Related Stories:

>