நீதிமன்ற அனுமதியுடன் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்ல இருந்த நிலையில் அவரது அறை தகர்ப்பு

சென்னை: நீதிமன்ற அனுமதியுடன் இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்ல இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில்தான் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது. அங்குதான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கியது. ஆகையால், இளையராஜாவுக்கு ரொம்பவே நெருக்கமான இடமாக அது கருதப்பட்டது.பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா காலி செய்ய வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் - இளையாராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின் சில நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோ செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியின் மூலம் இன்று அங்குள்ள இசை கருவிகளை எடுத்துவர அவரது உதவியாளர்கள் சென்றபோது இளையராஜா பயன்படுத்திய அறை தகர்க்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த இசைக்கருவிகள் வேறொரு அறையில் குப்பை போன்று போடப்பட்டிருந்தது. அந்த அறையின் சாவி இளையராஜாவுடன் உள்ளது.

இதனை பற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறையில் அறிய புகைப்படங்கள், பத்மவிபூஷன் விருது, அவரது கைபட எழுதிய இசை குறிப்புகள் போன்றவை அனைத்தும் அந்த அறையில் குப்பை போன்று வைக்கப்பட்டு இருந்தது. இதனை நீதிமன்றம் நியமித்த ஆணையரிடம் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அந்த அறையின் சாவி தன்னிடம் இருப்பதால் அந்த அறையில் உள்ள பொருட்களை அவர் ஏதும் செய்திருக்க இயலாது என என்னி பிரசாத் ஸ்டுடியோவிற்க்குள் தன்னை அனுமதிக்க நீதிமன்றத்தில் வழக்கை திரும்ப பெறவும் ஒப்புக்கொண்டார். அந்த அறையை பார்த்தால் போதும் என்ற காரணத்தால் மட்டுமே வழக்கை திரும்மபெற ஒப்புக்கொண்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால் அந்த அறை தற்போது  தகர்க்கப்பட்ட காரணத்தால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்றால் மேலும் மனவருத்தம் அதிகமாகும் என்ற காரணத்தால் அவர் வரவில்லை என்று தெரிவித்ததாக வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். மேலும் இளையராஜாவின் பொருட்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுவதாக சரவணன் தெரிவித்தார்.

Related Stories:

>