×

அரியலூர் அருகே கிறிஸ்துமஸ் குடிலில் பெண் குழந்தை மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில், தமிழ்நாடு சுற்றுலாத்தலங்களில் ஒன்றானதும், வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல மாதா திருத்தலம் உள்ளது. இதனருகே, அடைக்கல மாதா முதியோர் இல்லம், சிறார் இல்லம், மருத்துவமனை மற்றும் அடைக்கலமாதா தத்துவள மையம் ஆகியன செயல்பட்டு வருகிறது.

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிலில் நேற்று காலை குழந்தை கதறல் சத்தம் கேட்டு ஆலயத்தில் உள்ளோர் சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதுகுறித்து திருமானூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு காப்பகத்திற்கு சென்று குழந்தையை எடுத்து சென்று திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முலுதவி கொடுத்து, தொடர்ந்து அரியலூர் எஸ்பி ஸ்ரீநிவாசன், டிஎஸ்பி மதன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், அனாதையாக போடப்பட்ட அந்த பெண் குழந்தைக்கு தேவையான உடைகளை வழங்கி, ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தத்துவள மையத்தில், மைய நிர்வாகி சகோதரி எத்தின், நர்ஸ் கிளாரா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

இன்றைய சூழலில் பெண் கிடைக்காத காரணத்தால் பல இளைஞர்கள் வேதனையுடன் முதிர் கண்ணன்களாக வலம் வருகின்ற நிலையில், பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை, ஒன்றை ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள காப்பகத்தில் பெண் குழந்தை தொட்டிலில் போடப்பட்டதால் மனிதநேயம் உள்ள அனைவரது நெஞ்சத்தையும் பதறவைக்கிறது.

Tags : hut ,Christmas ,Ariyalur , baby girl
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...