×

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!: கொரோனா பாதிப்பு, ஊரடங்கை தளர்த்துவது குறித்து விவாதம்..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகின்றது. தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உருமாறிய கொரோனா இந்தியாவிற்குள் வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு முழுமையான ஆலோசனையானது இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி காட்சி வாயிலாக இணைந்திருக்கிறார்கள். சென்னை தலைமை செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவில் இந்த கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாகவே தமிழகத்திலும் இந்த நிலை அமல்படுத்தப்பட்டு வந்தது.

ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு பரவியிருப்பதால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகளவில் கூடும் பட்சத்தில் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி? போன்றவை குறித்து ஆலோசிக்கவுள்ளனர். இன்று பிற்பகல் மருத்துவ அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.


Tags : Palanisamy ,District Collectors , District Collector, Chief Minister Palanisamy, Consulting
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...