ரன் அவுட் ஆன பிறகும் சக வீரரை உற்சாகப்படுத்திய ரஹானே: சமூக வலைத்தளங்களில் வைரல்

மெல்போர்ன்: இன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் தவறினால் ரஹானே ரன் அவுட் ஆனார். ஆனால் ரஹானே ஜடேஜாவை அங்கேயே சமாதானப்படுத்தி, தொடர்ந்து சிறப்பாக ஆடு என்ற ரீதியில் நல்ல முறையில் அவரை பார்த்து செய்கை செய்தது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் ரஹானேவின் பெருந்தன்மையை வெகுவாக பாராட்டி தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரஹானே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 112 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிள் ஒன்றுக்கு ரஹானேவை அழைக்க ரஹானே ரன் அவுட் ஆனார். ஆனால் ரன் அவுட் ஆனதால் கோபமடையாமல் பெவிலியன் செல்லும் போது ஜடேஜாவிடம் பரவாயில்லை நீ தொடர்ந்து நன்றாக ஆடு என்ற ரீதியில் செய்கை செய்து விட்டுப் போனார். இது ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி ரஹானேவின் செய்கையை வெகுவாகப் பாராட்டி தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட போது, தலைமைத்துவம் என்பது செயலில் உள்ளது என்பதை மீண்டும் ரஹானே நிரூபித்தார் என்று பாராட்டியுள்ளார்.

Related Stories:

>