×

இந்தோ-திபெத் வீரர்களுக்கும் இணைய தளத்தில் மதுபானம்

புதுடெல்லி: ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேன்டீன் மூலமாக மதுபானங்களும் விற்கப்படுகின்றன. இந்த சலுகையை மற்ற துணை ராணுவப் படைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ -திபேத் எல்லை காவல் படை வீரர்களுக்கும் இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தை இந்தோ-திபெத் காவல் படை தலைவர் தேஸ்வால் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்தோ -திபெத் படை வீரர்கள் ஒரு மாதத்தில் 8 பாட்டில் மதுபானங்களும், 6 பீர் கேன்களும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக, ராணுவ இணையதளத்தில் கணக்கு தொடங்க வேண்டும். தங்களுக்கு அருகாமையில் இருக்கும் ராணுவ கேண்டீனை குறிப்பிட்டு, அதில் இருந்து  இணையதளத்தில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்,’’ என்றார்.


Tags : veterans ,Indo ,Tibetan , Liquor on the website for Indo-Tibetan veterans
× RELATED 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய...