நோ கொரோனா சொல்லுங்க புது வைரசும் ஓடி போயிடும்: மத்திய அமைச்சர் அலப்பறை

புனே: இந்தியாவில் கொரோனா பரவியபோது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே வெளியிட்ட வீடியோவில்,  ‘கோ கொரோனா கோ’ என்று சொன்னால் போதும், கொரோனா போய்விடும்’ என்றார். இதனால், அவர் மிகுந்த கேலி கிண்டலுக்கு ஆளானார். அதோடு, கடந்த மாதம் அவரையே கொரோனா தாக்கியது. மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா இங்கிலாந்தில் உருவாகியுள்ளது.

இதை விரட்டவும் ஒரு வழி சொல்லிவிட்டார் அதவாலே. புனேயில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘கோ கொரோனா கோ (போ கொரோனா போ) என கூறியதால் பழைய கொரோனா வைரஸ் ஓடி விட்டது. இப்போதும், ‘நோ கொரோனா’ சொன்னால் போதும், புதிய கொரோனாவும் ஓடிப் போயிடும்,’’ என்றார். இது, சமூக வலைதளங்களில் நேற்று தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிவிட்டது.

Related Stories:

>