காங். முன்னாள் எம்எல்ஏ யசோதா காலமானார்: மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை கோடம்பாக்கம் வேளாளத் தெருவில் வசித்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா நேற்று காலமானார். அவருக்கு வயது (75)..  இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்று 4 முறை எம்எல்ஏவாக இருந்தவர். . யசோதா கடந்த 3ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது  மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 23ம் தேதியில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் நேற்று காலை 6.15 மணியளவில் உயிரிழந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட யசோதா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். மேலும்விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ரூபி மனோகரன்,  எம்.பி.ரஞ்சன் குமார், திக தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.ேக.வாசன்உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>