அதிமுக அரசு மத்தியில் உள்ள பாஜவை ஆதரிப்பது ஏன்?: பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

சென்னை: மத்திய அரசை அதிமுக ஆதரிப்பது ஏன்? என்று பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். விளக்கம் அளித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: தமிழ்நாட்டின் அரசியல் நேற்று இன்று நாளை என எப்போதும் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை. எப்போதுவும் தொண்டனாக உழைக்க சபதம் ஏற்கிறேன். ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் தொண்டர்கள் கையில். ஜெயலலிதாவின் அரசு இப்ேபாது ஒரு தொண்டரின் கையில்.

ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மத்திய அரசில் நாம் அங்கம் வகிக்கவில்லை.  பதவிகளில் இல்லை. மத்திய அமைச்சர்களாக இல்லை. இருந்தாலும் இன்றைக்கு மதுரையில் ரூ.1400 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கிறது. 11 அரசு மருத்துவ கல்லூரிகள் ஒரே ஆண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி ஒரே ஆண்டில் இவ்வளவு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்ததாக வரலாறு இல்லை. ஊரக உள்ளாட்சி துறையில் மத்திய அரசு அடிப்படை தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை தந்துகொண்டிருக்கிறது.

மத்திய அரசிடம் இருந்து எதை கேட்டு பெற முடியுமோ, எதை கொண்டுவர முடியுமோ? அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம். இதனால், இன்றைக்கு நாங்கள் மத்திய அரசை ஆதரித்து கொண்டு இருக்கிறோம். ஒரு பக்கம் ஆட்சி. ஒரு பக்கம் கட்சி. இந்த இரண்டையும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ண ஓட்டப்படி நடத்தி கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறோம். அதிமுக அரசு செய்த சாதனைகளை வீடு, வீடாக சென்று சொல்லுங்கள் என்றார்.

Related Stories:

>