தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கான அடிப்படைத் தகுதியே அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பணியில் இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பணியில் பட்டியலினத்தவர் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது வரையிலும், பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும் சேர முடியும்.

அடிப்படைத் தகுதிக்கான பணியிலேயே  ஒரு பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 32 வயது வரை சேர முடியும் எனும் போது, அதைவிட கூடுதல் தகுதியும், கூடுதல் அனுபவமும் தேவைப்படும் பதவிக்கு குறைவான வயது வரம்பை நிர்ணயிப்பது சரியல்ல. எனவே வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும், அதன்மூலம் போட்டியை பரவலாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>