தண்ணீர் தொட்டியில் மூழ்கி முதியவர் பலி

ஆலந்தூர்: ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சூரியபிரகாஷ் (67), ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. நேற்று முன்தினம் இவரது மனைவி பங்கஜம் கே.கே.நகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த சூரிய பிரகாஷ் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்தார். தகவலறிந்து வந்த கிண்டி போலீசார், சடலத்தைக் கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, சூரியபிரகாஷ் அதில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>