சோபியான் போலி என்கவுன்டர் ராணுவ அதிகாரி மீது குற்றப் பத்திரிகை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி 3 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர்கள் தீவிரவாதிகள் என்று ராணுவம் கூறியது. ஆனால், கொல்லப்பட்ட 3 பேரும் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு குழு அமைத்து உண்மையை கண்டறியும்படி உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணையில், கொல்லப்பட்ட 3 பேரும் அப்பாவிகள் என்றும், ரஜோரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போனவர்கள் என்பதும் உறுதியானது. மேலும் ‘ஆயுதப்படை சிறப்பு சட்டம் 1990’ என்ற தீவிரவாதிகளுக்கு எதிரான சட்டப்பிரிவை இந்த என்கவுன்டரில் ராணுவ அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதும் உறுதியானது. இதனால், ராணுவத்தை சேர்ந்த கேப்டன் புபிந்தர், பிலால் அகமது மற்றும் தபீஸ் அகமது என 3 பேர் மீது நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

More
>