×

இத்தாலியில் பூமியில் புதைந்து கிடந்த 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சாலையோர கடை கண்டுபிடிப்பு: தொல்பொருள் ஆய்வில் ஆச்சர்யம்

ரோம்: இத்தாலியில் புதைந்து கிடந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சாலையோர சூடான பானங்கள் விற்பனை செய்யும் கடையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தாலியில் உள்ள பாம்பி நகரானது கிபி 79ம் நூற்றாண்டில் எரிமலை வெடித்ததால் புதையுண்டது. இங்குள்ள தொல்பொருள் ரிகியோ வீ. என்ற தளத்தில், இத்தாலி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சாலையோர துரித உணவக கடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘தெர்மோபாலியம்’ எனப்படும் சூப் அல்லது சூடான பானங்கள் விற்பனை செய்யும் கடையாக இது இருந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை, கடந்த சனிக்கிழமை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த தொல்லியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்காக இன்னும் திறக்கப்படவில்லை. இந்த கண்டுபிடிப்பு பற்றி பாம்பி தொல்பொருள் பூங்காவின் இயக்குனர் மாசிமோ ஓசானா கூறுகையில், “நாங்கள் ஒரு முழு தெர்மோபோலியத்தை அகழ்வாராய்ச்சி செய்வது இதுவே முதல் முறையாகும்,” என்றார். இந்த நகரில் இதுவரையில் 66 ஹெக்டேர் அதாவது 165 ஏக்கர் அளவு கொண்ட நகரத்தின் மூன்றில் 2 பங்கு இடங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

வாத்து, கோழி, மீன், நத்தை
* இந்த கடையில் கிடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த சில உணவு பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள மண் பானை ஜாடிகளில் இவை உள்ளன.
* கடையின் முன்புறம் உள்ள கவுன்டர், பிரகாசமான வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இங்கு சில விலங்குகள் வரையப்பட்டு உள்ளன. அவை, இந்த கடையில் சமைக்கப்படும் உணவில் இடம் பெற்றவையாக இருக்கலாம்.
* ஒரு கோழி, 2 வாத்துக்கள் தலைகீழாக தொங்குவது போன்ற ஓவியமும் உள்ளது. லத்தீனில் பட்டேரா என அழைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட வெண்கலத்தால் ஆன கிண்ணம், சமையல் பாத்திரங்கள், மது பிளாஸ்க்குகள் ஆகியவற்றையும் அங்கு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.* கடையில் இருந்த ஜாடிகளில் பன்றி இறைச்சி, மீன், நத்தைகள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Tags : shop ,earth ,Italy , Archaeologist finds 2,000-year-old roadside shop buried in Italy
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...