மாணவனுக்கு கத்தி வெட்டு

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தயாளன்(20). சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ, 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை அதே பகுதியில் நூலகம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 4 வாலிபர்கள் வழிமறித்து தயாளனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தயாளனை வெட்டினர். அவர் உயிருக்கு பயந்து கும்பலிடமிருந்து தப்பி அங்கிருந்து தெருவில் ஓடினார். அவரை விடாது துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில், தயாளனுக்கு தலை, கழுத்து, கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த அக்கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியது. பின்னர், படுகாயம் அடைந்த தயாளனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>