×

மாவோயிஸ்டுகளை அடக்க கேரள போலீசுக்கு நவீன கவச வாகனம்

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் ‘தண்டர்போல்ட்’ படையினருக்கு மாவோயிஸ்டுகளை அடக்குவதற்காக 2 நவீன கவச வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் மலபார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளை அடக்க கேரள போலீசில் ‘தண்டர்போல்ட்’ என்ற அதிரடிப்படை உள்ளது. இவர்களுக்கு நவீன ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவோயிஸ்டுகளை அடக்குவதற்காக ‘தண்டர்போல்ட்’ படையினருக்கு 2 நவீன கவச வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய புல்லட் ப்ரூப் வாகனம் லைட் ஆர்மட் ட்ரூப் கேரியருடன் வருகிறது.

டிரைவர் உட்பட 12 பேர் அமர்ந்து செல்ல முடியும். அனைவரிடமும் லைட் மெஷின் கன் இருக்கும். எந்தவொரு நிலப்பரப்பு மற்றும் காலநிலையிலும் வாகனத்தை இயக்க முடியும். பயணம் செய்யும்போது 4 பக்கங்களில் இருந்தும் சுடலாம். அசோக் லேலண்ட் தயாரிப்பு. ஒரு கவச வாகனத்தின் விலை ₹62.44 லட்சம். சென்னையில் இருந்து கேரள போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மலபார் பிராந்தியத்தில் ‘தண்டர்போல்ட்’ படையினரிடம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற கவச வாகனங்கள் ேகரள காவல்துறைக்கு வாங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ேகரள காவல்துறையின் நவீனமயமாக்கல் நிதியில் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

Tags : Kerala ,Maoists , Modern armored vehicle for Kerala police to suppress Maoists
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு