×

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் தாக்கல செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் 200 பக்தர்களுக்கு அனுமரி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும் 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரையும், 6 மணியில் இருந்து 7 மணி வரையும் தலா 200 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்த ஆருத்ரா தரிசன விழாவில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதுசம்பந்தமாக கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


Tags : District Devotees , Chidambaram Natarajar, Arudra Darshan, for devotees, permission
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா...